ரஷ்யா-உக்ரேன் போர் மோசமாவதை அமெரிக்கா தடுக்க முடியுமா?

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில்,
ரஷ்ய உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர நடத்தப்பட்ட சந்திப்பு எதிர்பாராத விதமாய் வாக்குவாதத்தில் முடிவடைந்தது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தம்மை அவமதித்ததாக உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) குறைகூறியிருக்கிறார்.
மூவாண்டுகளாகத் தொடரும் போரை முடிவுக்கு கொண்டுவர ஸெலென்ஸ்கி தடையாக இருப்பதாய்த் டிரம்ப் சொன்னார்.
இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் செய்தியாளர்களின் முன்னிலையில் நடந்தது.
உக்ரேனுக்கு அமெரிக்கா ஆதரவளிக்க முக்கிய கனிம உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு இரு தலைவர்களும் சந்தித்திருந்தனர்.
ஆனால் அந்த உடன்பாட்டில் இருவரும் கையெழுத்திடவில்லை.
வாக்குவாதத்திற்குப் பிறகு அதிபர் ஸெலென்ஸ்கி வெள்ளை மாளிகையைவிட்டு திடீரென கிளம்பியதாகச் சொல்லப்படுகிறது.
ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே நிலையான அமைதியைக் கொண்டுவர அமெரிக்கா பேரப்பேச்சில் ஈடுபடுமா என்று அதிபர் ஸெலென்ஸ்கி சந்தேகத்தை எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
போர் மோசமாவதை அமெரிக்கா தடுக்க முடியுமா என்றும் அவர் கேட்டிருந்தார்.
டிரம்ப் நிர்வாகத்திற்கு நன்றியுடன் இருக்கவேண்டும் என்று அமெரிக்கத் துணை அதிபர் JD வான்ஸ் (JD Vance) வாக்குவாதத்திற்கு இடையே குறுக்கே பேசியதாய்க் கூறப்படுகிறது.