பொலிஸ் தேசபந்துவின் வீட்டுக்குள் புகுந்தது… தேசபந்து மாயம்…

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் வசிக்கும் வீட்டை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் திடீரென நுழைந்து சோதனையிட்டு தேடுதல் நடத்தியுள்ளது.
மாத்தறை நீதவான் நீதிமன்றம் அவரை கைது செய்ய உத்தரவிட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் சோதனையிட்டபோது அவர் வீட்டில் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
2023 டிசம்பர் 31ஆம் திகதி மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதற்கிடையில், அதிபர் அனுர குமார திசாநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் பேசுகையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் உயரதிகாரி ஒருவரை கைது செய்ய பொலிஸார் வீட்டுக்குச் சென்றபோது அவர் தலைமறைவாகிவிட்டார் என்றார்.
ஆனால் அவர் இன்று அல்லது நாளை சரணடைவார் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.