எரிபொருள் இல்லை என்றால் பஸ்கள் நிறுத்தப்படும்… கியுவில் நின்று பஸ்களை இயக்க முடியாது…

டீசல் கிடைக்கவில்லை என்றால், அடுத்த திங்கட்கிழமை முதல் பஸ்களை இயக்காமல் இருக்க வேண்டியிருக்கும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, பஸ்களுக்கு டீசல் வழங்கும் முறையை உருவாக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.
கடந்த கொரோனா வைரஸ் காலத்தில் இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் மூலம் எரிபொருள் வழங்கப்பட்டது போல், தனியார் பஸ்களுக்கும் எரிபொருள் வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
பஸ்களுக்கு நீண்ட வரிசையில் காத்து நின்று எரிபொருள் பெற்று சேவையாக இயக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
எரிபொருள் விநியோகஸ்தர்கள் தொடங்கியுள்ள நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோக நெருக்கடி குறித்து கொழும்பில் ஊடகங்களிடம் பேசியபோது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.