கணேமுல்ல சஞ்சீவ கொலையாளிக்கு பணம் கொடுக்காமல் பொலிஸில் பிடித்துக் கொடுத்துள்ளனர்

அண்மையில் பல்வேறு நபர்களைக் கொலை செய்வதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல்கள் ஒப்பந்தங்களை வழங்கியபோது, வாக்குறுதியளிக்கப்பட்டபடி பணம் வழங்கப்படவில்லை என்பது சமீபத்திய சம்பவங்களின் அவதானிப்பின்படி தெரிய வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
பல சந்தர்ப்பங்களில் கொலை செய்வதற்கு குற்றக் கும்பல்களால் பெரும் தொகை பணம் வாக்குறுதியளிக்கப்பட்ட போதிலும், கொலை செய்த பின்னர் கொலையாளியை சட்டத்தின் பிடியில் சிக்க வைப்பது அதிகமாக நடப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, அண்மையில் நடந்த பெரும்பாலான குற்றங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் மற்றவர்களைப் பயன்படுத்தி திட்டமிட்டு, வாக்குறுதியளிக்கப்பட்ட பணத்தைக் கொடுக்காமல் , அவர்களை சிக்க வைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.