ஸெலென்ஸ்கி வெள்ளை மாளிகையில் நடத்தப்பட்ட விதத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.

உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) வெள்ளை மாளிகையில் நடத்தப்பட்ட விதத்தைக் கண்டித்து அமெரிக்காவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.
உக்ரேனுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும்படி ஆர்ப்பாட்டக்காரர்கள் கேட்கின்றனர்.
உக்ரேனை ரஷ்யா ஆக்கிரமித்துக் கொள்வதை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதில் அமெரிக்காவுக்கும் உக்ரேனுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து இருதரப்பு உறவு கசப்படைந்து வருகிறது.
அதிபர் டோனல்ட் டிரம்ப் செய்தது அமெரிக்காவையும் உலகையும் அவமதிக்கும் செயல் என்றும் உலக நாடுகளிடமிருந்து அமெரிக்காவைத் தனிமைப்படுத்தி ரஷ்யாவுடன் கைகோர்க்க அவர் முயல்வதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.
ஐரோப்பா உக்ரேனுக்குத் தொடர்ந்து உதவி வழங்கும் என்று நம்பிக்கையோடு இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.