“உக்ரேனுக்கு பிரிட்டனின் முழு ஆதரவு உண்டு”.

உக்ரேனுக்கு பிரிட்டனின் முழு ஆதரவு உண்டு என பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமர் (Keir Starmer) உறுதிகூறியுள்ளார்.
உக்ரேனுக்கான ஆதரவை நிறுத்தவிருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மிரட்டியதை அடுத்து ஸ்டாமர் அவ்வாறு சொன்னார்.
நேற்று முன்தினம் (28 பிப்ரவரி) உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியும் (Volodymyr Zelenskiy) டிரம்ப்பும் வெள்ளை மாளிகையில் சந்தித்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் லண்டனுக்குச் சென்ற ஸெலென்ஸ்கி , ஸ்டாமரைச் சந்தித்தார்.
உக்ரேனின் தற்காப்பை அதிகரிக்க 2.26 பில்லியன் பவுண்டு கடன் ஒப்பந்தம் ஒன்றும் செய்யப்பட்டது.
ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு நிதி பயன்படுத்தப்படும் என ஸெலென்ஸ்கி சொன்னார்.
அவர் அடுத்து மன்னர் சார்ல்ஸைச் சந்திப்பார்.
லண்டனில் ஐரோப்பியத் தலைவர்கள் கலந்துகொள்ளும் உச்சநிலைச் சந்திப்பிலும் கலந்துகொள்வார்.
ஐரோப்பியத் தலைவர்கள் பலர் உக்ரேனுக்கான தங்களது ஆதரவை மறுவுறுதி செய்துள்ளனர்.
ஸெலென்ஸ்கியுடனும் , டிரம்ப்புடனும் பேசிய பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மக்ரோன் (Emmanuel Macron) இருநாட்டுத் தலைவர்களையும் அமைதிகாக்கும்படிக் கேட்டுக்கொண்டுள்ளார்.