மறைந்திருந்த தேசபந்து சரணடைகிறாரா..?

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாத்தறை நீதவான் நீதிமன்றம் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டதை அடுத்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து காணாமல் போனார்.
நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு தென்னக்கோனை இதுவரை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அவர் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பல இடங்களில் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்ட போதிலும், அவர் அந்த இடங்களில் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.