அத்தியவசிய பொருட்கள் இல்லாத ச.தொ.சா விற்பனை நிலையம்! மக்கள் விசனம்.
அத்தியவசிய பொருட்கள் இல்லாத நிலையில் சதொசா விற்பனை நிலையம்!
முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள சதொசா விற்பனை நிலையத்தில் பல அத்திய அவசிய பொருட்கள் இல்லாத நிலை காணப்படுகின்றது.
நாட்டில் அரசாங்கம் சீனி உள்ளிட்ட பொருட்களுக்கு விலை குறைப்பு செய்யப்பட்ட போதும் குறைந்த விலையில் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்தாலும் விற்பனை நிலையத்தில் பல பொருட்கள் இல்லாத நிலை காணப்படுகின்றது, சீனி, பருப்பு, புளி, உள்ளி, உள்ளிட்ட பொருட்கள் இல்லாத நிலை காணப்படுவதுடன்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் இரண்டு சதொச விற்பனை நிலையங்களில் தற்போது முள்ளியவளை பகுதியில் உள்ள ஒரு விற்பனை நிலையமே இயங்கிவருகின்றது.
புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலையம் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இயங்காத நிலை காணப்படுவதாகவும் இதனை இயக்குவதன் ஊடாக வறிய மக்கள் குறைந்த விலையில் பொருட்களை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.