உக்ரைன் குறித்து அமெரிக்கா கடுமையான முடிவு

உக்ரைனுக்கு வழங்கப்படும் அனைத்து ராணுவ உதவிகளையும் நிறுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த வாரம் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே நிலவும் மோதல்களை நிறுத்தி அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி உக்ரைன் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.
அதன்படி, அந்த இலக்கை நோக்கிச் செல்ல கட்டாயப்படுத்தும் வகையில், உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கும் அனைத்து ராணுவ உதவிகளையும் நிறுத்த முடிவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.