வந்தாரா வனவிலங்கு மையத்தில் சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய நரேந்திர மோடி!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, இன்று ஆனந்த அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவைப் பார்வையிட்டு திறந்து வைத்தார்.

2,000இற்கும் மேற்பட்ட உயிரினங்களுக்கும், 1.5 இலட்சத்திற்கும் மேற்பட்ட அழிந்து வரும் மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளான விலங்குகளை மீட்டு வந்தாரா பாதுகாத்து வருகிறது.

வந்தாரா அதிநவீன விலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் ரிலையன்ஸ் ஜாம்நகர் சுத்திகரிப்பு வளாகத்தில் 3000 ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்துள்ளது வந்தராவில் உள்ள வன விலங்குகளுடன் பிரதமர் மோடி நேரம் செலவிட்டார்.

பிரதமர் மோடி, ஒராங்குட்டான்கள், ஆசிய சிங்கக் குட்டிகள், வெள்ளை சிங்கக் குட்டி உள்ளிட்ட விலங்குகளுடன் விளையாடி உணவு அளிக்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.