பின்னணி பாடகி கல்பனா அவரது வீட்டில் மயக்கமான நிலையில், மருத்துவமனையில் அனுமதி!

பிரபல பின்னணி பாடகி கல்பனா அவரது வீட்டில் மயக்கமான நிலையில், மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளார்.
ஹைதரபாத்தில் இருக்கும் நிஜாம்பேட் பகுதியில் தன் கணவருடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் இரண்டு நாட்களாக தன் வீட்டின் கதவை திறக்காமல் இருந்தால் , சந்தேகம் அடைந்த குடியிருப்பின் பாதுகாவலர் அக்கம்பக்கத்தினரிடம் கூறியிருக்கிறார்.
அவர்கள் உடனே பொலிஸாருக்கு தகவல் அளித்தால், உடனடியாக கல்பனா வீட்டிற்கு வந்த பொலிஸார், வீட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்து பார்த்த போது, அவர் வீட்டிலுள்ள கட்டிலில் மயங்கியப்படி சரிந்து கிடந்துள்ளார்.
கல்பனாவை மீட்ட பொலிஸார், தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.அளவுக்கு மீரிய தூக்க மாத்திரைகளை உட்கொண்டதால், பிரபல பாடகியான கல்பனா ராகவேந்தருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
யார் இந்த கல்பனா!
பிரபல பாடகரான டி.எஸ். ராகவேந்திராவின் மகள் கல்பனா. இசைக் குடும்பத்தை சேர்ந்த கல்பனா ராகவேந்தர் 5 வயதில் இருந்து பாடல்கள் பாடி வருகிறார்.
கல்பனா ராகவேந்தர் (பிறப்பு 8 மே 1980) ஒரு இந்தியப் பின்னணிப் பாடகி, ஐடியா ஸ்டார் சிங்கர் மலையாள வெற்றியாளர் மற்றும் பிக் பாஸ் தெலுங்கு சீசன் 1 இல் பங்கேற்பவர், பாடலாசிரியர் மற்றும் சில திரைப்படங்களில் நடித்தும் இருக்கின்றார்.
அவர் தனது ஐந்து வயதில் பின்னணிப் பாடகியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், மேலும் 2013 ஆம் ஆண்டுக்குள் 1,500 பாடல்களைப் பதிவுசெய்து, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் 3,000 நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
2010 ஆம் ஆண்டில், மலையாள தொலைக்காட்சி சேனல் ஏசியாநெட் ஒளிபரப்பிய தென்னிந்திய பாடல் நிகழ்ச்சியான ஸ்டார் சிங்கர் சீசன் 5 இன் வெற்றியாளராக இருந்தார். சூப்பர் சிங்கர் ஜூனியரின் நடுவராகவும் இருக்கின்றார்.
என் ராசாவின் மனசிலே படத்தில் வரும், போடா போடா புண்ணாக்கு… போடாத தப்புக் கணக்கு பாடல் மிக பிரபலம்.
அதேபோல, ‘புன்னகை மன்னன்’ படத்தில் கமல், சாப்ளின் செல்லப்பாவாக வரும் வாக்கிங் ஸ்டிக் காட்சியும்,அந்த பாட்டை பாடியதும், இந்த காட்சியில் நடித்ததும் பிரபல பாடகி கல்பனா ராகவேந்தர் தான்.
தாஜ்மஹால் திரைப்படத்தில் திருப்பாச்சி அருவாள தீட்டிக்கிட்டு… பாடல், நரசிம்மா படத்தில் நாலா நந்தலாலா… பாடல், பிரியமான தோழி திரைப்படத்தில் இடம்பெற்ற பெண்னே நீயும் பெண்ணா… பாடல், கம்பீரம் திரைப்படத்தில் ஒரு சின்ன வெண்ணிலா… பாடல், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான மழை திரைப்படத்தில் இஸ்தான்புல் ராஜ குமாரி… பாடல் மாயாவி படத்தில் இடம்பெற்ற கடவுள் தந்த அழகிய வாழ்வு … பாடல் என இவரின் பாடல்களை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்நிலையில் கல்பனாவில் விபரீத முடிவு திரை துறையிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது கல்பனா வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் கண்கணிப்பில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர் தற்கொலைக்கு முயன்றாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளனர். எனினும், அவரது தற்கொலை முயற்சிக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.