பறிபோகுமா அரவிந்குமாரின் பதவி?

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்குமாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பங்காளிக் கட்சியான மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் ஆராய்வதற்காக அக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டமும் அவசரமாக கூட்டப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
20 இற்கு எதிராக வாக்களிப்பது என மலையக மக்கள் முன்னணி தீர்மானித்திருந்த நிலையில் அதற்கு ஆதரவாக அக்கட்சியின் அரசியல் பிரிவு தலைவராக செயற்படும் அரவிந்தகுமார் நேற்று வாக்களித்தார்.
இதனை அடிப்படையாகக்கொண்டே அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், தமிழ் முற்போக்குக் கூட்டணியில் அவர் வகிக்கும் பதவியும் பறிக்கப்படவுள்ளது.