உண்மையில் அன்பு இருந்தால் இந்திய மீனவர்களைத் தடுத்து நிறுத்துங்கள் – அமைச்சர் பிமல் இந்தியாவிடம் வேண்டுகோள்

வடக்கு மக்களின் ஒரே வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலை சுதந்திரமாகச் செய்ய அனுமதிக்க வேண்டும் என இந்திய அரசிடம் கோரிக்கை விடுப்பதாக சபைத் தலைவர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (5) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கை கடல் எல்லைக்குள் வரும் இந்திய மீனவர்கள் மீது அந்நாட்டுச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசிடம் கோரிக்கை விடுப்பதாகவும், இது தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் இந்தியாவைக் கேட்டுக் கொண்டார்.
இந்திய அரசு இலங்கைக்கு எவ்வளவு உதவினாலும், யாழ்ப்பாண மக்களுக்கு இந்த உதவியை செய்யாவிட்டால், மற்ற உதவிகள் உண்மையான உதவிகளாக இருக்குமா என்ற கேள்வி உள்ளது என்று பிமல் ரத்நாயக்க மேலும் கூறினார்.
வடக்கு மக்களின் ஒரே வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுப்பதாகவும் சபைத் தலைவர் மேலும் தெரிவித்தார். மக்களுக்கு உதவுவது என்பது வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்குவது மட்டுமல்ல, மக்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க உதவுவதுதான் என , மீன்வளம், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் வள அமைச்சகத்தின் செலவினத் தலைப்பு விவாதத்தில் பேசும் போது அமைச்சர் பிமல் ரத்நாயக்க இப்படி கூறினார்.