யாழ் பல்கலைக்கழகத்திற்கு வெளிவாரிப் பேரவை உறுப்பினர்கள் நியமனம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு வெளி வாரிப் பேரவை உறுப்பினர்களாக 16 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நியமனங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்தினவால் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நியமனங்கள் கடந்த ஐந்தாம் திகதி முதல் மூன்று வருட காலங்களுக்கு செயற்படும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
நியமனம் பெற்றவர்களின் விவரங்கள் கீழே,
பேராசிரியர் ஏ. எஸ் சந்திரபோஸ்,(ஓய்வு பெற்ற சமூகவியல் பேராசிரியர்)
இ. பத்மநாதன்(முன்னாள் பிரதம செயலாளர்- நிதி)
ஏந்திரி எஸ். வினோதினி(பிரதம பொறியியலாளர், கட்டடங்கள் திணைக்களம்)
ஏந்திரி. ஏ சுபாகரன் (திட்டப் பணிப்பாளர், ஏசியா பவுண்டேஷன்)
வைத்திய நிபுணர் என். சரவணபவன்,(மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் நிபுணர்)
ஷெரீன் அப்துல் சரூர்,(எழுத்தாளர் மற்றும் பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்)
கலாநிதி எம் அல்பிரெட்(முன்னாள் பீடாதிபதி பேராதனை பல்கலைக்கழகம்)
ஏந்திரி அ. குணாளதாஸ் (பட்டயப் பொறியியலாளர்)
என். செல்வகுமாரன் (முன்னாள் பீடாதிபதி சட்ட பீடம் கொழும்பு)
வனஜா செல்வரத்தினம் (பணிப்பாளர் வட மாகாண தொழிற்துறை திணைக்களம்))
டி கே. பி. யு. குணத்திலக (முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இலங்கை மின்சார சபை)
எம். ஜே. ஆர் .புவிராஜ்(முன்னாள் பணிப்பாளர் திறைசேரி)
பேராசிரியர் சி. சிவயோக நாதன்(வாழ்நாள் பேராசிரியர் பேராதனை பல்கலைக்கழகம்)
பி. ஏ. சரத் சந்திர( முன்னாள் அரச அதிபர் வவுனியா)
க. பிரபாகரன் (சட்டத்தரணி)
ஏ. எம். பி. என். அபே சிங்க(மாகாணப் பணிப்பாளர் விவசாயத் திணைக்களம் வடமத்திய மாகாணம்)
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய ஒவ்வொரு பல்கலைக்கழகத்தினதும் உள்வாரிப் பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையயை விட ஒரு உறுப்பினர் அதிகமான எண்ணிக்கைக்கு வெளிவாரி உறுப்பினர்கள் பேரவைக்கு நியமிக்கப்படுவது வழமையாகும்.
பல்கலைக்கழகப் பேரவை ஒன்றின் வெளிவாரி உறுப்பினராகத் தேர்வு செய்யப்படும் ஒருவர் பட்டதாரியாக இருத்தல் வேண்டும். அல்லது,உயர்தகமையைக் கொண்டிருத்தல் வேண்டும் என்ற அடிப்படைத் தகுதியுடன்,பால்நிலை சமத்துவம் மற்றும் சமய ரீதியான பிரதிநிதித்துவத்துடன்,சமூக நலன் சார்ந்த உயர் சிந்தனை யுடைய நபர்களையே வெளிவாரி உறுப்பினர்களாக நியமிக்கலாமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் வரையறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.