போக்குவரத்து கடமையில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளுக்கு வெகுமதி அதிகரிப்பு.

போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வெகுமதித் தொகை 25 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து அமலுக்கு வரும் வகையில் பதில் பொலிஸ்மா அதிபரால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து உத்தியோகத்தர்களின் கடமைகளின் வினைத்திறன் மற்றும் தரத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் வௌியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.