மெர்வின் சில்வா ரிமாண்ட்!

முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா 17-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். காவல்துறை அவரை மஹார மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முந்தைய அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தபோது, அரசு நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.