உலகில் எரிவாயு விலை குறைகிறது… இலங்கையில் விலை மாற்றம் இன்று.

லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் மார்ச் மாதத்திற்கான எரிவாயு விலை மாற்றத்தை இன்று அறிவிக்க உள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் புதிய எரிவாயு விலைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
உலக சந்தையில் தற்போது எரிவாயு விலை கணிசமாக குறைந்துள்ளது. குளிர்காலம் முடிந்து எரிவாயு தேவை குறைவதும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.