விவசாய நிலங்களுக்கு தேவையான உரங்களை தடையின்றி வழங்க ஜனாதிபதியின் கவனம்!

இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, யால பருவத்தில் விவசாயப் பணிகளைத் தொடங்குவதற்கு விவசாய நிலங்களுக்குத் தேவையான உரங்களை தட்டுப்பாடின்றி தொடர்ச்சியாக வழங்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.
மேலும், யால பருவத்தில் நெல் விவசாயம் மற்றும் பிற விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உரம் குறித்து இங்கு விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், விவசாயிகள் சிரமமின்றி மற்றும் தடையின்றி யால பருவ விவசாயப் பணிகளைத் தொடங்க தேவையான சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.