ரூபவாஹினி , ITN ஆகியவற்றை அரசினால் இனி பராமரிக்க முடியாது… பணம் சம்பாதிக்க வேண்டும் : ஜகத் மனுவர்ண

கடந்த சில ஆண்டுகளில் முன்னாள் ஜனாதிபதிகள், அரச தொலைக்காட்சி சேனல்களை அழித்துவிட்டதாக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிகள் யாரும் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களுக்காக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.
“இந்த சேனல்கள் கடந்த ஆண்டுகளில் நாட்டை ஆண்ட அரசாங்கங்களுக்காக மட்டுமே செயல்பட்டுள்ளன. 2021 இல் 122 மில்லியன் ரூபாயும், 2022 இல் 144 மில்லியன் ரூபாயும், 2023 இல் 154 மில்லியன் ரூபாயும் மதிப்புள்ள வேலைகளை செய்துள்ளன” என்று எம்.பி. கூறினார்.
“பொது நிதியை பயன்படுத்தி இந்த நிறுவனங்களை தொடர்ந்து நடத்த முடியாது. இந்த சேனல்கள் தாங்களாக சொந்தமாக நிதியை தேட வேண்டும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.