வெடித்துச் சிதறியது SpaceXஇன் விண்கலம்!

செல்வந்தர் இலோன் மஸ்க்கின் SpaceX நிறுவனம் ஏவிய விண்கலம் வானில் வெடித்துச் சிதறியிருக்கிறது. அந்நிறுவனம் ஏற்கெனவே 2 மாதத்திற்கு முன்னர் விண்கலத்தை அனுப்ப மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
இம்முறை விண்கலம் பாய்ச்சப்பட்ட 10 நிமிடத்திற்குள் சுக்குநூறாக நொறுங்கியது. சுமார் 125 மீட்டர் உயரம் கொண்ட விண்கலம் டெக்சஸிலிருந்து நேற்று மாலை பாய்ச்சப்பட்டது. கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பை இழந்த விண்கலம் தாறுமாறாகச் சுற்றி வெடித்துச் சிதறியது.
அமெரிக்க வான்வெளியை அது பாதித்தது. சில விமானச் சேவைகள் தாமதமடைந்தன. SpaceX நிறுவனம் விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்பதை மத்திய விமானப்போக்குவரத்து அமைப்பு உறுதிசெய்தது.
அமைப்புடன் இணைந்து விசாரணை செய்யப்போவதாகவும் திருத்த நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும் SpaceX நிறுவனம் சொன்னது. ஆகப்பெரிய, சக்திவாய்ந்த விண்கலத்தைச் செவ்வாய்க்கு அனுப்புவது திரு மஸ்க்கின் திட்டம்.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுத்துறை 2030ஆம் ஆண்டுக்குள் ஸ்டார்ஷிப் விண்கலத்தில் நிலாவிற்கு விண்வெளி வீரர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது.