பெண் ஊழியர்களுக்கு மாதத்தில் ஒருநாள் மாதவிடாய் விடுப்பு – எல்&டி நிறுவனம் அறிவிப்பு!

பெண் ஊழியர்களுக்கு மாதத்தில் ஒருநாள் மாதவிடாய் விடுப்பு வழங்கவிருப்பதாக எல்&டி நிறுவனத்தின் தலைவர் எஸ்.என். சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.
லார்சன் & டூப்ரோ நிறுவனத்தில் பெண் ஊழியர்களுக்கு மாதத்தில் ஒருநாள் ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு வழங்கப்படவிருப்பதாக அந்நிறுவனத்தின் தலைவர் எஸ்.என். சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.
இருப்பினும், அதன் துணை நிறுவனங்களின் நிதி மற்றும் தொழில்நுட்பத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கப்படவில்லை. இந்நிறுவனத்தில் சுமார் 60,000 ஊழியர்களில் 5,000 பெண் ஊழியர்கள் (9%) உள்ளனர்.
ஸ்விக்கி, சொமாட்டோ நிறுவனங்களும் மாதவிடாய் விடுப்பு அறிவித்தபோதும், பெரும்பான்மையான பிற பெரிய நிறுவனங்கள் இதனைப் பின்பற்றவில்லை.
வாரத்துக்கு 90 மணிநேரம் உழைக்க வேண்டும் என்றும், வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் எவ்வளவு நேரம்தான் மனைவியைப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என்றும் எல்&டி தலைவர் எஸ்.என். சுப்ரமணியன் சமீபத்தில் கூறியது சமூக ஊடகங்களில் விமர்சனங்களுக்கு ஆளாகியது.