தென்கொரிய அதிபர் விடுவிக்கப்பட்டார்.

தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோலை விடுவிக்கும்படி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல், சனிக்கிழமை (மார்ச் 8ஆம் தேதி) 52 நாள் சிறைவாசத்துக்குப் பின் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று ஏஎஃப்பி செய்தித் தகவல் கூறுகிறது.

இந்த நீதிமன்ற உத்தரவு தென்கொரிய ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கு சாதகமாக அமையக்கூடும் என்று அரசியல் கவனிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னதாக, அந்நாட்டு அதிபர் யூன், கடந்த டிசம்பர் மாதம் பிறப்பித்த ராணுவ சட்ட ஆட்சி நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நாட்டில் கிளர்ச்சியைத் தூண்டினார் எனக் கூறி அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. கிளர்ச்சியைத் தூண்டுவது போன்ற சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டால் அதிபருக்கு சட்டத்திலிருந்து விடுவிப்பு இல்லை என்ற நிலை தென்கொரியாவில் உள்ளது.

தென்கொரியாவின் ஊழல் விசாரணை அமைப்பு அதிபரைக் கைது செய்ததை எதிர்த்து முறையிட்டனர். அதிபருக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டியதாகக் கூறி அவரைக் கைது செய்ய அந்த அமைப்புக்கு அதிகாரம் இல்லை என்று அதிபரின் வழக்கறிஞர்கள் சோல் மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் வாதிட்டனர்.

இதை எதிர்த்து வாதாடிய அமைப்பு அதிகாரத்தை மீறி அதிபர் செயல்பட்டதால் தனக்கு அதிபரை விசாரிக்கும் அதிகாரம் இருப்பதாக எதிர்வாதம் செய்தது.

இதையடுத்து தீர்ப்பளித்த நீதிமன்றம், விசாரணை நடவடிக்கையில் வெளிப்படைத் தன்மை தேவை என்றும் விசாரணை குறித்து எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லை என்று கூறி அதிபரின் கைதை ரத்து செய்தது.

நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்ற யூனின் வழக்கறிஞர்கள் சட்டத்தின் மாட்சிமை இன்னுடன் உயிர்ப்புடன் இருப்பதாகக் கொண்டாடினர்.

Leave A Reply

Your email address will not be published.