15 ஆண்டுகளில் முதன்முறையாக அமெரிக்கக் கைதிக்குத் துப்பாக்கியால் சுடப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றம்

அமெரிக்காவில் காதலியின் பெற்றோரை பெஸ்பால் (baseball) மட்டையால் அடித்துக்கொன்ற ஆடவருக்குத் துப்பாக்கியால் சுடப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

15 ஆண்டுகளில் முதன்முறையாகக் கைதி ஒருவருக்கு அவ்வாறு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

2001ஆம் ஆண்டு பிரேட் சிக்மன் (Brad Sigmon) என்ற அந்த ஆடவர் தமது காதலியைக் கடத்த முயன்று அதில் தோல்வியுற்றபின்
காதலியின் பெற்றோரைக் கொன்றார்.

சிக்மன் தமது காதலியைக் கடத்திச் சென்று, அவரைக் கொன்ற பின் தானும் தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டிருந்தார்.

நஞ்சு கலந்த ஊசி அல்லது மின் நாற்காலியின் மூலம் மரணதண்டனையை எதிர்கொள்ள சிக்மன் அஞ்சியதால் துப்பாக்கியால் சுடப்பட்டு மரணமடைய விரும்பியதாக அவரது தற்காப்புத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

1977ஆம் ஆண்டு முதல் 3 கைதிகளுக்கு மட்டுமே துப்பாக்கியால் சுடப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக AP செய்தி நிறுவனம் தெரிவித்தது.

Leave A Reply

Your email address will not be published.