கமாண்டோ ரங்கா கைது

துப்பாக்கிச் சூடு உட்பட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும், “கமாண்டோ ரங்கா” மேற்கு வடக்கு குற்றப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உதவி காவல் துறை கண்காணிப்பாளர் , ரோஹன் ஒலுகல அவர்களின் மேற்பார்வையில் நடத்தப்பட்ட விசாரணையின் பின்னர், குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரிபிட்டர் வகை துப்பாக்கியையும் கைப்பற்றியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்தில் மினுவாங்கொடை பகுதியில் கெஹல்பத்தர பத்மவின் நெருங்கிய நண்பர் ஒருவரை சுட்டுக் காயப்படுத்திய சம்பவத்திலும் இந்த நபருக்கு தொடர்பு இருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.