ஜம்மு-காஷ்மீரில் காணாமல் போன மூன்று பேரும் நீர்வீழ்ச்சிக்கு அருகே சடலமாக மீட்பு!

ஜம்மு-காஷ்மீரில் காணாமல் போன மூன்று பேரும் நீர்வீழ்ச்சிக்கு அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த தர்ஷன் சிங் (40), யோகேஷ் சிங் (32), மற்றும் வருண் சிங் (15) ஆகியோர் மார்ச் 4 ஆம் தேதி பில்லாவரில் உள்ள லோஹாய் மல்ஹார் கிராமத்திற்கு திருமண விழாவில் கலந்து கொள்ளச் சென்றனர்.
திருமண ஊர்வலம் சுராக் கிராமத்தை அடைந்தபோது, மூவரும் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களில் ஒருவர் தனது குடும்பத்தினரிடம் திருமணத்திலிருந்து திரும்பிய போது காட்டில் வழிதவறிவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.
இததையடுத்து ராணுவம், துணை ராணுவம் மற்றும் காவல்துறை இணைந்து காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க கூட்டுத் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர்.
அடர்ந்த காட்டுப் பகுதி என்பதால், காணாமல் போன மூவரையும் கண்டுபிடிக்க பாதுகாப்புப் படையினர் ட்ரோன்களை சேவையில் ஈடுபடுத்தினர்.
ட்ரோன் கண்காணிப்பு மூலம், மூவரின் உடல்கள் நீர்வீழ்ச்சிக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டன என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.