மூன்றாவதாக பிறக்கும் பெண் குழந்தைக்கு ரூ.50,000 வைப்பு தொகை வரவு வைக்கப்படும் – தெலுங்கு தேசம் எம்பி அறிவிப்பு

மூன்றாவதாக பிறக்கும் பெண் குழந்தைக்கு ரூ.50,000 வைப்பு தொகை வரவு வைக்கப்படும் என்று தெலுங்கு தேசம் எம்பி கூறியுள்ளார்.

ஆந்திர பிரதேச மாநிலத்தின் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.கே அப்பல நாயுடு. இவர் தனது தொகுதியில் மூன்றாவதாக பிறக்கும் பெண் குழந்தையின் வங்கிக்கணக்கில் ரூ.50,000 வைப்பு நிதி வரவு வைக்கப்படும் என்றும், மூன்றாவதாக பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு பசு மாடு மற்றும் கன்றுக்குட்டி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கில் எம்பி இந்த முடிவை அறிவித்துள்ளார்.

இதில், பெண் குழந்தை தனது திருமண வயதை எட்டும் போது அவரது வைப்பு தொகை ரூ. 10 லட்சம் வரை அதிகரிக்கும்.

இதுகுறித்து எம்பி கூறுகையில், “இந்திய மக்கள் தொகை அதிகரிக்க வேண்டும். மூன்றாவதாக பிறக்கும் பெண் குழந்தையின் வங்கிக்கணக்கில் ரூ.50,000 வைப்பு நிதி வரவு வைக்கப்படும். ஆண் குழந்தைகளுக்கு பசு மாடு மற்றும் கன்றுக்குட்டி வழங்கப்படும்.

என் தாயார், சகோதரிகள், மனைவி மற்றும் மகள்கள் உள்ளிட்ட மகளிரால் ஊக்குவிக்கப்பட்டு இந்த முடிவை அறிவித்துள்ளேன்” என்றார்.

மேலும், பெண்களுக்கு நடைபெறும் சமூக ஏற்றத்தாழ்வுகளை குறிப்பிட்டும் அவர் பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.