தேசிய மக்கள் சக்திக்குள் தற்கொலை குண்டுதாரிகள் குழு நுழைந்துள்ளது… ஜனாதிபதிக்கு எச்சரிக்கை!

தேசிய மக்கள் சக்திக்குள் தற்கொலை குண்டுதாரிகள் குழு நுழைந்துள்ளது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வணக்கத்திற்குரிய கலாகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இது தொடர்பான உண்மைகளை நிரூபிக்க தங்களிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும், இஸ்லாமிய தீவிரவாதிகளான இந்த குழுக்களிடம் இருந்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்திக்குள் இதுபோன்ற குழுக்கள் நுழைந்ததற்கான விளக்கத்துடன் கூடிய துண்டுப் பிரசுரம் மற்றும் புகைப்படத்தையும் அவர் காட்சிப்படுத்தியுள்ளார்.