மன்னாரில் மாபெரும் தொழிற்சந்தை (Video)

மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக் களத்துடன் இணைந்து மன்னார் மாவட்டச் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் தொழிற்சந்தையானது இன்றைய தினம் (11.03) செவ்வாய் மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வானது படித்த இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பினை இலகுவாக பெற்றுக் கொள்வதற்காகவும் தொழில் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும்,வேறு கற்கை நெறிகளைத் தொடர்வதற்காகவும் வாய்ப்பளிக்கும் விதத்தில் தொழில் தேடுநர் மற்றும் தொழில் தருநர்களை ஒரே இடத்தில் ஒன்றிணைக்கும் நோக்கோடு மாவட்டச் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் 50க்கும் மேற்பட்டநிறுவனங்கள் மன்னார் மாவட்டச்  செயலகத்திற்கு வருகை தந்திருந்ததோடு 300க்கும் அதிகமான இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டு  தந்து பயன் பெற்றிருந்தனர்.

அத்தோடு உள்ளூர் உற்பத்தியாளர்களின் தயாரிப்புகளும் சந்தைப்படுத்தப்பட்டிருந்தன.

இந்த தொழிற்சந்தையானது கடந்த வருடத்திலும் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்றிருந்த வேளையில் 2000க்கும் அதிகமான இளைஞர் யுதிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.