நாற்காலியுடன் வெளியேறிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ: நகைச்சுவை உணர்வுடன் பிரியாவிடை.

கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நாடாளுமன்றத்தில் இருந்து தனது நாற்காலியுடன் நாக்கை நீட்டியபடி வெளியேறினார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜஸ்டின் ட்ரூடோ இந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். கட்சிக்குள் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக அவர் பதவி விலகினார்.
புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை ட்ரூடோ பிரதமராக தொடர்ந்தார். மார்ச் 10 அன்று மார்க் கார்னி புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மார்ச் 11 அன்று ட்ரூடோ, புதிய பிரதமரை சந்தித்தார். தனது பதவிக்காலம் முடிந்ததால், ட்ரூடோ நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறினார்.
அவர் தனது நாற்காலியுடன் நாக்கை நீட்டியபடி வெளியேறும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது இந்த நகைச்சுவை உணர்வு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.