அநுராதபுர வைத்தியர் பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது !

அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் மருத்துவர் விடுதியில் பெண் மருத்துவரை பாலியல் ரீதியாகத் தாக்கியதாகக் கூறப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (12) கல்னேவ பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது உறுதிப்படுத்தினார்.
இதற்கிடையில், சந்தேக நபரை உடனடியாகக் கைது செய்யக் கோரி அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (12) நாடளாவிய வேலைநிறுத்தத்தைத் தொடங்கியது.
பாதிக்கப்பட்ட 32 வயதுடைய பெண் மருத்துவர், நேற்று (10) தனது கடமைகளை முடித்துவிட்டு, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மருத்துவ அதிகாரிகளுக்கான விடுதியில் உள்ள தனது விடுதிக்குத் திரும்பியதாகவும்
மாலை 6.30 மணி முதல் மாலை 7.00 மணி வரை, அடையாளம் தெரியாத ஒரு நபர் வளாகத்திற்குள் நுழைந்து, கத்தியைக் காட்டி மிரட்டி, பாலியல் ரீதியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.