அனுராதபுரம் பாலியல் வன்கொடுமை குற்றவாளி கைது! முந்தைய நாள் சிறையில் இருந்து விடுதலையாகி உள்ளார்!

அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்நேவ போலீசார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குற்றவாளியை விசாரித்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
மருத்துவரிடம் இருந்து திருடப்பட்ட மொபைல் போன் மூலம் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர் போதைப்பொருள் வழக்கில் சிறையில் இருந்து விடுதலை ஆகி வந்தவர். சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் தான் அவர் விடுதலையாகியுள்ளார்.
நிலங்க மதுரங்க ரத்நாயக்க (பண்டி) என்று அடையாளம் காணப்பட்ட இவர், டி 03, அல்லபரா, கல்நேவ என்ற முகவரியில் வசிப்பவர். இவர் ராணுவத்தில் இருந்து தப்பி ஓடியவரும் ஆவார்.