ரிஷாத் பதியுதீனுக்கு அடைக்கலம் கொடுத்த வர்த்தகர் தலைமறைவு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு அடைக்கலம் கொடுத்த பிரபல வர்த்தகர் பற்றி குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை செய்து வருகின்றது.
ஏற்கனவே ரிஷாத் பதியுதீன், இறுதியாக தங்கியிருந்தது வைத்தியர் ஒருவரது தெஹிவளை வீட்டில் என்று தெரிவிக்கப்பட்டு வந்தது.
எனினும், பிரபல வர்த்தகர் ஒருவரது சொகுசு இல்லத்திலேயே அவர் இறுதியாகத் தங்கியிருந்தார் என்றும், கைது செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் வைத்தியரின் வீட்டில் அவர் தங்கியிருந்தார் என்றும் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் தெஹிவளையில் குற்றப் புலனாய்வுப் பிரிவு தேடுதலை நடத்தியுள்ளது.
இருப்பினும் குறித்த வர்த்தகர் குடும்பத்துடன் அங்கிருந்து ஏற்கனவே சென்றுவிட்டார் என்று கூறப்படுகின்றது.