முன்னணி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், சோப்பின் சபீர், உபேந்திரா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
இதன் பின் அடுத்து ரஜினி யார் இயக்கத்தில் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, ரஜினியின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.