இலங்கையில் , இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு!

கிழக்கு மாகாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு, சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் குருணாகல் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை ஆய்வு மையம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.