தப்பி ஓட முயன்ற மித்தேனிய கொலை குற்றவாளி கைது!

மித்தேனியாவில் நடந்த மூன்று கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி ஒருவர் துபாய் தப்பிச் செல்ல முயன்றபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
மித்தேனிய காவல் நிலையமும், தங்கல்லை குற்றவியல் புலனாய்வுத் துறையும் இணைந்து இந்த வழக்கின் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். 23 வயதான இந்த குற்றவாளி அங்குலந்தெனிய, கட்டுவன பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.