ரணில் விக்கிரமசிங்க மீது அதிருப்தி – கட்சி நிர்வாகிகள் வாக்குவாதம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. கொழும்பில் உள்ள சிறிகொத்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் இந்த நிகழ்வு நடந்தது.
கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமனக் கடிதங்களை வழங்கினார். தொகுதி அமைப்பாளர்களை நியமிப்பதில் ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக, சில தொகுதி அமைப்பாளர்களுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ரணில் , அமைப்பாளர்களது முகம் பார்க்காது திரும்பி நின்றார். சிலரை பேசவிடாது அமர கட்டளை போட்டார். இதனால் சிலர் சிறிகொத்தவை விட்டு வெளியேறி செல்வதை காண முடிந்தது.