அக்மீமனவில் பயங்கரம் – முன்னாள் சிறை அதிகாரி சுட்டுக்கொலை!

காலி, அக்மீமன தலகஹ பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பூஸ்ஸா சிறையின் முன்னாள் அதிகாரி சிரிதத் தம்மிக கொல்லப்பட்டார்.
அவர் வீட்டில் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் அவரை சுட்டுக் கொன்றதாக போலீசார் தெரிவித்தனர்.
அந்த சிறை அதிகாரி கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஓய்வு பெற்றார். இந்த கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.