வெற்றிகரமான யேர்மனிய தேசிய சுற்றுப்போட்டியில் மகிழி மற்றும் தமிழி மார்க்கண்டு.

கடந்த வார இறுதியில் குற்றர்ஸ்லோ நகரில் நடைபெற்ற முழு யேர்மனிக்குமான தேசிய தரநிலைக்கான சுற்றுப்போட்டியில், இளையோர் பிரிவில் TV அல்டிங்கன் சார்பில் மிகுந்த ஆற்றலுடன் கடுமையான போட்டியாளர்களை எதிர்கொண்ட மகிழியும் தமிழியும் தங்கள் திறமையால் சிறந்து விளங்கினர்.
U11 வயது பிரிவில் மகிழி மார்க்கண்டு 2ஆவது இடத்தைத் தமதாக்கிக் கொண்டார், அதேசமயம் U13 வயது பிரிவில் அவரது சகோதரி தமிழி மார்க்கண்டு 3ஆவது இடத்தை வென்றார்.
தனிச்சுற்றில் களமிறங்கிய மகிழி மார்க்கண்டு, கடுமையான இரண்டு போட்டியாளர்களை எதிர்கொண்ட போதிலும், தனது திறமையால் பளிச்சென்று 2ஆவது இடத்தைப் பிடித்தார்.
தமிழி மார்க்கண்டு, தன்னுடைய U13 பிரிவில் தனிப்பட்ட, இரட்டையர் மற்றும் கலப்பு ஆகிய மூன்று பிரிவுகளிலும் சளைக்காமல் தனது திறமையை வெளிப்படுத்தி, கடுமையான முயற்சியுடன் 3ஆவது இடத்தை வென்றார்.
இவ்விரு சகோதரிகளும், தேசிய மட்டத்திலான போட்டிகளில் தங்கள் திறமையால் முன்னணியில் விளையாடக் கூடியவர்களாக இருப்பதை அபாரமாக வெளிப்படுத்தியுள்ளனர்.