“பாலியல் பலாத்காரம் செய்து விட்டு ஏதாவது மருந்து எடு, என சொல்லி கதிரையோடு கட்டினான் … கயிற்றை அவிழ்த்தே தப்பித்தேன்” – மருத்துவரின் பரபரப்பு வாக்குமூலம்!

அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் பயிற்சி சிறப்பு மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த 34 வயது சந்தேக நபரை 48 மணி நேரம் காவலில் வைத்து விசாரிக்க அனுராதபுரம் தலைமை நீதிபதி நாலக சஞ்சீவ ஜெயசூரிய போலீசாருக்கு அனுமதி அளித்துள்ளார்.
சந்தேக நபர் இன்று அனுராதபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கிடையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரின் மூத்த சகோதரி மற்றும் மற்றொரு நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களையும் எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் 32 வயதுடைய பயிற்சி மருத்துவர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபரால் கூர்மையான ஆயுதத்தை காட்டி மிரட்டி கடந்த திங்கள்கிழமை மாலை 6.30 மணி முதல் 7.00 மணி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
பின்னர், சந்தேக நபர் மருத்துவரின் மொபைல் போனையும் எடுத்துச் சென்றார். அவரது தொலைபேசி சிக்னல்களைக் கொண்டே போலீசார் சந்தேக நபரை தேடி விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவத்தை எதிர்கொண்ட மருத்துவர் தனது அனுபவத்தை போலீசாரிடம் இவ்வாறு பகிர்ந்துள்ளார்:
“நான் மாலை 3.30 மணியளவில் வேலை முடிந்து விடுதிக்கு வந்தேன். பிறகு ருவன்வெலி மகா சாயாவுக்கு (பௌத்த ஸ்தூபி) சென்று வழிபட்டேன். திரும்பி வரும்போது மாலை 6.30 மணியிருக்கும். விடுதியில் உள்ள , என் அறைக்குள் நான் நுழைய முயன்றபோது, யாரோ ஒருவர் என் பின்னால் இருப்பது போல் உணர்ந்தேன். நான் திரும்பி பார்த்தேன். அப்போது என் எதிரே அறையின் கதவு அருகே நின்றிருந்த ஒருவர் என் கழுத்தில் கத்தியை வைத்து கதவை திறக்க சொன்னார். நான் கதவை திறந்ததும் என்னை உள்ளே தள்ளி டி-ஷர்ட்டால் என் வாயை மூடினார். பிறகு அறையின் கதவை மூடிவிட்டு லைட்களை போட்டு எல்லா இடத்தையும் பார்த்தான். பிறகு எல்லா லைட்டையும் அணைத்துவிட்டு குளியலறை லைட்டை மட்டும் போட்டான். நான் ராணுவத்தில் இருந்து தப்பி வந்தவன். போலீஸ் என்னை தேடுகிறது. நான் இங்கு சிறிது நேரம் இருக்க வேண்டும், உனக்கு எதுவும் செய்ய மாட்டேன் என்று முதலில் கூறினான். ஆனால் கத்தினால் கழுத்தை அறுத்து விடுவதாக மிரட்டினான். என் அருகில் உட்கார்ந்து என் இரண்டு கைகளையும் முன்னால் வைத்து துணியால் வாயை கட்டினான். உன் போன் எங்கே என்று கேட்டான். பிறகு என் போனை எடுத்து லாக்கை திறக்க சொன்னான். இந்தி பாட்டு போட்டு தர சொன்னான். நான் பயந்துவிட்டேன். அவனுடன் போராடியபோது அவன் கையில் இருந்த கத்தியால் என் கையில் காயம் ஏற்பட்டது. என்னை கொன்று விடுவான் என பயந்தேன். வேறு வழியில்லாமல் அவன் சொன்னதற்கெல்லாம் சம்மதித்தேன். என் போனில் என் புகைப்படத்தை எடுத்தான். போனை எடுத்து செல்வதாக கூறினான். இதை வெளியே சொன்னால் உனக்கு தான் பிரச்சனை வரும். நான் செய்தவற்கு என்னை மன்னித்துவிடு. இதற்கு ஏதூவது மாத்திரை சாப்பிட சொன்ன பிறகு அவன் தப்பி ஓடிவிட்டான். என் கைகளையும் கால்களையும் கட்டி வைத்திருந்தான். நான் அவற்றை அவிழ்த்து பார்த்தபோது அறையின் கதவு மூடப்பட்டு ஜன்னல் திறந்திருந்தது. அந்த அவமானத்தை தாங்க முடியாமல் குளித்தேன். பிறகு உடனடியாக வார்டில் இருந்த மருத்துவரிடம் நடந்ததை சொன்னேன். அவரது போனில் என் அப்பாவிடம் சொன்னேன். பிறகு சம்மாந்தூர் மருத்துவமனையில் இருக்கும் என் நண்பரிடமும் சொன்னேன்.”