அனுராதபுரம் மருத்துவமனை வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது!

மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தை முன்வைத்து அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் தொடங்கப்பட்ட வேலைநிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.
அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் தொடங்கிய அடையாள வேலைநிறுத்தம்(13) காலை 8.00 மணியுடன் முடிவுக்கு வந்தது.