யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு கும்பலின் மூவர் சிக்கினர்!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் வாள்வெட்டு தாக்குதல் நடத்திய கும்பலை சேர்ந்த 3 பேர் வாள்கள், ஆயுதங்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் நேற்று கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில், கடந்த வாரம் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் தொழிலதிபர் ஒருவரை வாளால் வெட்டி விரலை துண்டித்ததும் இந்த கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இந்த கும்பல் யாழ்ப்பாணத்தில் உள்ள தொழிலதிபர்களை வாளால் வெட்டி மிரட்டி கப்பம் வசூலிப்பதும், கூலிக்கு கொலை செய்வதும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாண நீதிமன்றத்தில் இருந்து பெறப்பட்ட தடுப்பு காவல் உத்தரவின் பேரில், சந்தேக நபர்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.