நலமுடன் இருக்கிறார் நடிகை மாலினி ஃபொன்சேகா – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

பிரபல நடிகை மாலினி ஃபொன்சேகா தற்போது நலமாக இருப்பதாக அவரது உறவினர் சமனலி ஃபொன்சேகா தனது முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“இந்த புகைப்படத்திற்கு தலைப்பு சொல்லுங்கள் என்று அத்தையிடம் கேட்டேன். அதற்கு அவர் ‘மிஷன் கம்ப்ளீட்டட்’ என்று போடுங்கள் என்றார். அதனால், அத்தை நலமாக இருக்கிறார். அவர் குணமடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி!” என்று சமனலி பதிவிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் மாலினி ஃபொன்சேகா இறந்துவிட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், இந்த பதிவு, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.