பட்டலந்த அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் – உணர்ச்சிவசப்பட்ட சபாநாயகர் !

1988-89 காலகட்டத்தில் நடந்த கொலைகள் தொடர்பான பட்டலந்த ஆணைய அறிக்கையை சபை தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக இரு நாட்கள் விவாதம் விரைவில் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
அறிக்கை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகவும், அதன்படி இந்த அறிக்கையை சட்டமா அதிபரிடம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தல்களை வழங்க ஜனாதிபதி ஒரு சிறப்பு குழுவை அமைக்கவும் முடிவு செய்துள்ளார்.
அறிக்கை தாக்கல் செய்த பிறகு, சபாநாயகர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக காணப்பட்டார்.