கனடா வரலாற்றில் புதிய சாதனை – இலங்கை தமிழர் நீதி அமைச்சராக நியமனம்!

கனடாவின் நீதி அமைச்சராக இலங்கை தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கேரி ஆனந்தசங்கரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கனடா பிரதமர் மார்க் கார்னியின் அரசாங்கத்தில் அவர் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், கனடா வரலாற்றில் நீதி அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ்-கனடியர் என்ற பெருமையை கேரி ஆனந்தசங்கரி பெறுகிறார்.

யாழ்ப்பாணத்தில் பிறந்த கேரி ஆனந்தசங்கரி, 1983 ஆம் ஆண்டு கலவரம் நடந்தபோது கனடாவுக்கு சென்று பின்னர் அங்கு குடியேறினார். வழக்கறிஞரான கேரி ஆனந்தசங்கரி, தமிழ் மக்களின் உரிமைகளுக்காக நீண்ட காலமாக போராடி வருபவர். அரசியலுக்கு வருவதற்கு முன்பு, கேரி ஆனந்தசங்கரி வழக்கறிஞராகவும் சமூக ஆலோசகராகவும் பணியாற்றினார்.

மேலும், அவர் கனடிய தமிழ் வர்த்தக சபை, கனடிய தமிழ் காங்கிரஸ் மற்றும் கனடிய தமிழ் இளைஞர் மேம்பாட்டு மையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.