தேசபந்து தென்னக்கோனின் மனைவியிடம் சி.ஐ.டி விசாரணை – கணவர் எங்கே என்று தெரியாது என தகவல்!

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் மனைவியிடம் குற்றப் புலனாய்வுத் துறை (சி.ஐ.டி) வாக்குமூலம் பெற்றுள்ளது.
அப்போது, தேசபந்து தென்னக்கோன் எங்கே இருக்கிறார் என்று தனக்குத் தெரியாது என்று அவர் கூறியுள்ளார்.
தென்னக்கோனின் மனைவியும் மகனும் இப்போது தங்கள் வீட்டில் உள்ளனர்.
தென்னக்கோன் உட்பட எட்டு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மாத்தறை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த 28ஆம் தேதி உத்தரவிட்டது.
ஆனால், அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்கு மேலாகியும், அவரைப் பற்றிய எந்த தகவலையும் பொலிசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.