பட்டலந்த அறிக்கையின் உண்மைகள்

ரணிலை துாக்கிலிட “திசைகாட்டி” முயற்சிக்கிறதா? – பட்டலந்த அறிக்கையின் உண்மைகள்!
பத்தளந்த அறிக்கையை வைத்து ரணில் விக்கிரமசிங்கவை பொசுக்க அரசாங்கம் முயற்சிக்கிறதா?
ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக அமைக்கப்பட்ட கமிஷனின் அதிகாரங்கள் என்ன?
“தாத்தா”வின் பொய்யான வாக்குறுதிகளை “திசைகாட்டி” அல்லது ஜே.வி.பி அல்லது NPP அரசு நம்பி ஏமாந்ததா?
2001ல் தாக்கல் செய்யப்பட்ட பத்தளந்த அறிக்கையை, “திசைகாட்டி” அறிவில்லாமல் , மீண்டும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ததா?
பத்தளந்த அறிக்கையின் மூலம் ரணில் விக்கிரமசிங்கவை தூக்கிலிடும் வரை அல்லது சமூக உரிமைகளை பறிக்கும் வரை காத்திருக்கும் “திசைகாட்டி” ஆதரவாளர்களை மீண்டும் ஏமாற்ற அரசாங்கம் முயல்வது தெளிவாகிறதா? இதுதான் பேசப்படவுள்ள விடயம்!

அல் ஜசீரா தொலைக்காட்சியில் பத்தளந்த அறிக்கை குறித்து ஒரு வார்த்தை கூட பேசாத அரசாங்கம், ரணில் விக்கிரமசிங்க அந்த நிகழ்ச்சியில் கொடுத்த “பழைய வாக்குறுதி”யை நம்பி அவசரமாக அறிக்கையை தாக்கல் செய்தது.

“பத்தளந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. அது பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத ஒரு ரகசிய ஆவணம். எனவே அதைப்பற்றி யாரும் பேச முடியாது” என்று ரணில் விக்கிரமசிங்க அந்த நிகழ்ச்சியில் கூறினார். இதை நம்பி “திசைகாட்டி” அரசாங்கமும் அதன் ஆதரவாளர்களும் நம்பி ஏமாந்தனர்.

2000 மார்ச் மாதம் அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பத்தளந்த அறிக்கையை வெளியிட்டார். ஒரு வருடம் கழித்து, 2001 மார்ச் மாதம் விஜயபால மெண்டிஸ் , ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து விலகி சந்திரிக்காவுக்கு ஆதரவாக இருந்தபோது, இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.

இந்த விவரங்கள் எதுவும் தெரியாமல், “திசைகாட்டி” அரசாங்கம் , எந்த ஆய்வும் செய்யாமல், அறிக்கையை தாக்கல் செய்ய அமைச்சரவை முடிவு செய்தது.

24 ஆண்டுகளுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை மீண்டும் தாக்கல் செய்து “திசைகாட்டி” அரசாங்கம் பெருமை பேசியது. ரணில் விக்கிரமசிங்க சிறையில் அடைக்கப்படும் வரை அல்லது சமூக உரிமைகள் பறிக்கப்படும் வரை “திசைகாட்டி” ஆதரவாளர்கள் காத்திருந்தாலும், இப்போது என்ன நடக்கிறது? எதுவும் நடக்கவில்லை என்பது தெளிவாகிறது.

இலங்கையில் இரண்டு வகையான கமிஷன்கள் உள்ளன. விசாரணை கமிஷன் உண்மைகளை விசாரித்து சில பரிந்துரைகளை செய்து ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க முடியும். அதற்கு தண்டனை வழங்கும் அதிகாரம் இல்லை.

1977ல் ஜே.ஆர். ஜெயவர்த்தன மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் சிறப்பு ஜனாதிபதி விசாரணை கமிஷன்களை அமைத்தனர். இத்தகைய கமிஷன்களுக்கு நீதிமன்ற அதிகாரமும் உண்டு. உயர் நீதிமன்ற நீதிபதிகளை மட்டுமே நியமிக்க முடியும். விசாரணை நடத்தி, யாரையாவது குற்றவாளி அல்லது நிரபராதி என்று அறிவித்து, தேவைப்பட்டால் தண்டனையை பரிந்துரைக்கும், முழு அதிகாரம் இந்த கமிஷனுக்கு உண்டு. இந்த பரிந்துரைகளை பாராளுமன்றம் அங்கீகரித்தால், தண்டனை வழங்க முடியும். ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் சமூக உரிமைகள் பறிக்கப்பட்டது இத்தகைய சக்திவாய்ந்த கமிஷன் மூலம்தான்.

முன்னாள் மக்கள் விடுதலை முன்னணியில் (JVP) செயல்பட்டிருந்த அரசியல்வாதியான வருண ராஜபக்ச , 2009 ஆம் ஆண்டு மேற்குக் மாகாண சபை தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் இருந்து JVP வேட்பாளராக போட்டியிட்டதோடு, பிரசார பணிகளில் முக்கியமான ஒரு நபராகவும் செயல்பட்டார். அவர் இப்படி சொல்கிறார்.

“வரலாற்று சிறப்புமிக்க பணி” என்று கூறி, உணர்ச்சிகரமான உரையுடன் சபை தலைவர் பிமல் ரத்நாயக்க தாக்கல் செய்த பத்தளந்த கமிஷன் அறிக்கை, 22 ஆண்டுகளுக்கு முன்பு விஜயபால மெண்டிஸ் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த அதே அறிக்கை என தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் , தொலைபேசி கம்பஹா அமைப்பாளர் வருண ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இருநுற்று எட்டு பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில் பெரிய அளவிலான தகவல்கள் எதுவும் இல்லை என்றும், பத்தளந்த கமிஷனின் சாட்சியங்களுடன் கூடிய முழு அறிக்கை நாலாயிரம் பக்கங்களுக்கு மேல் இருக்கும் என்றும் ராஜபக்ச கூறினார். அந்த நாலாயிரம் பக்க அறிக்கையில் கூட சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கூடிய எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பிமல் ரத்நாயக்க மார்ச் 14ம் திகதியான நேற்று முன்தினம் , பாராளுமன்றத்தில் “ஜனாதிபதி செயலகத்தின் இருண்ட மூலையில் தூசடைந்திருந்த இந்த ஆவணத்தை உலகிற்கு கொண்டு வந்தோம்” என்று கூறியது தவறானது என வருண ராஜபக்ச கூறுகிறார்.

சம்பந்தப்பட்ட கமிஷன் ஆயிரத்து தொழாயிரத்து நாற்பத்தி எட்டாம் ஆண்டு 17 ஆம் இலக்க விசாரணை கமிஷன் சட்டத்தின் கீழ், நிறுவப்பட்ட கமிஷன் என்பதால், சட்டப்பூர்வ தண்டனைகளை விதிக்கக்கூடிய அதிகாரம் கொண்ட கமிஷன் அது அல்ல என்றும் அவர் மேலும் கூறினார்.

ஆனால், ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக அமைக்கப்பட்ட பத்தளந்த கமிஷன் இத்தகைய சிறப்பு அதிகாரம் கொண்ட கமிஷன் அல்ல. இது உண்மைகளை கண்டுபிடித்து ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கும் அதிகாரம் கொண்ட சாதாரண கமிஷன் மட்டுமே. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத விரக்தியை மறைக்க “திசைகாட்டி” அரசாங்கமும் அதன் ஆதரவாளர்களும் பத்தளந்த கமிஷனை வைத்து மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை மீண்டும் தாக்கல் செய்வது வேடிக்கையானது. அதாவது ரணில், சிலரது கையில் இத்துப் போன கயிற்றை கொடுத்தாரா என்பதும் கேள்வியாக தொக்கி நிற்கிறது?

Jeevan

Leave A Reply

Your email address will not be published.