முல்லைத்தீவை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் மலேசியாவில் சடலமாக மீட்பு

முல்லைத்தீவை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் மலேசியாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் தொழில் நிமித்தம் மலேசியாவில் தங்கியிருந்ததாக அறிய முடிகின்றது.
பாலம் ஒன்றிற்கு அருக்காமையில் மர்மமான முறையில் இறந்து காணப்பட்டதாக கூறப்படுகின்றது. மலேசிய காவல்துறையினர் உடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முல்லைத்தீவு கணுக்கேணி என்னும் இடத்தை சேர்ந்த வரதராசா ஜெயசீலன் (43 வயது ) என்பவரே இறந்த நிலையில் காணப்பட்ட குடும்பஸ்தர் என ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.