மேற்கு மாகாண ஆளுநர் ராஜினாமா செய்ததாரா? இல்லையா?

மேற்கு மாகாண ஆளுநர் பதவியை தான் ராஜினாமா செய்ததாக சமூக வலைதளங்களில் பரவும் செய்திகள் பொய்யானவை என ஹனீஃப் யூசுப் கூறுகிறார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் நாட்டுக்கு சேவை செய்யவே மேற்கு மாகாண ஆளுநர் பதவியை ஏற்றுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.
தான் எந்த மத அல்லது இன வேறுபாடுமின்றி செயல்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.