மன்னார் காற்றாலை மின்நிலையத்திற்கு வழக்கு தடை!

மன்னார் காற்றாலை மின்நிலையத்தின் நிலம் தொடர்பாக வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதால், அதன் பணிகளை அதானி நிறுவனமும் , இலங்கை அரசும் உடனடியாக தொடங்க முடியாது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் பொறியியளாளர் குமார ஜெயக்கொடி நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து கிடைத்த கடிதத்தை ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட எம்.பி அஜித் பி. பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
அந்த ஒப்பந்தம் இன்னும் ரத்து செய்யப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.