“87-90 ஜே.வி.பி செய்த அனைத்து கொலைகளுக்கும் நான் உட்பட ஆயுதம் ஏந்திய அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும்” – நந்தன குணதிலக கோரிக்கை!

1987-90 காலகட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) செய்த அனைத்து கொலைகளுக்கும், தன்னுடன் ஆயுதம் ஏந்திய அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக கோரிக்கை விடுத்துள்ளார்.
பத்தளந்த கமிஷன் அறிக்கை குறித்து நாட்டில் நிலவும் விவாதத்தை ஒட்டி அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
நந்தன குணதிலக 1994ல் ஜே.வி.பியின் அதிபர் வேட்பாளராக போட்டியிட்டார்.
பின்னர் அவர் பல்வேறு கட்சிகளில் இணைந்து பணியாற்றியதோடு, பாணந்துறை நகர மேயராகவும் பதவி வகித்தார்.